Homeசெய்திகள்சினிமா'தலைவர் 173' படத்தை இயக்கும் சுந்தர்.சி?.... ரஜினி எடுத்த அதிரடி முடிவு!

‘தலைவர் 173’ படத்தை இயக்கும் சுந்தர்.சி?…. ரஜினி எடுத்த அதிரடி முடிவு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.'தலைவர் 173' படத்தை இயக்கும் சுந்தர்.சி?.... ரஜினி எடுத்த அதிரடி முடிவு! இந்த படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் தற்போது டப்பிங் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் நடிகர் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினியின் 173 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ் போன்றோர் லிஸ்டில் இருந்தனர்.'தலைவர் 173' படத்தை இயக்கும் சுந்தர்.சி?.... ரஜினி எடுத்த அதிரடி முடிவு! ஆனால் இவர்களுக்கு ரஜினி நோ சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபகாலமாக ரஜினியின் அடுத்த படத்தை, இயக்குனர் சுந்தர்.சி இயக்கப் போவதாகவும், அந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது ஏற்கனவே ஐசரி கணேஷின் தயாரிப்பில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர்.சி – ஐசரி கணேஷ் கூட்டணியில் தலைவர் 173 படம் உருவாகும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. 'தலைவர் 173' படத்தை இயக்கும் சுந்தர்.சி?.... ரஜினி எடுத்த அதிரடி முடிவு!ஆனால் ஐசரி கணேஷ் தரப்பில் ரஜினியிடம் அவருடைய அடுத்த படம் குறித்து கேட்டபோது, “இப்போதுதான் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜெயிலர் 2 படத்தையும் முடித்துக் கொள்கிறேன். அதற்குள் என்னுடைய அடுத்த படத்தையும், அடுத்த பட இயக்குனரையும் முடிவு செய்துவிடுகிறேன். அதன் பிறகு அறிவித்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டாராம். இதன் மூலம் சுந்தர்.சி – ரஜினி கூட்டணி குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

MUST READ