Homeசெய்திகள்சினிமாஅய்யனாராக மாறிய சூர்யா..... இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள 'சூர்யா 45' படப்பிடிப்பு!

அய்யனாராக மாறிய சூர்யா….. இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள ‘சூர்யா 45’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

சூர்யா 45 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அய்யனாராக மாறிய சூர்யா..... இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள 'சூர்யா 45' படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி சூர்யா திரிஷா இருவருக்கமான காம்பினேஷன் காட்சிகள் பெருங்குளத்தூரில் படமாக்கப்பட்ட வருகிறதாம். மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதே சமயம் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. அய்யனாராக மாறிய சூர்யா..... இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள 'சூர்யா 45' படப்பிடிப்பு!அடுத்தது ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், மக்களுக்கு நல்லது செய்யும் அய்யனார் போன்ற ஒரு கேரக்டரிலும் சூர்யா நடித்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சூர்யா 45 படத்தில் நடிகர் சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாரா? அல்லது இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

MUST READ