சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர்.


மேலும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை அதிதி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில் தமன்னாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் இவர் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
சுதா கங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். சூர்யா உடனான படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


