Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரேஸில் இணைந்த அடுத்தடுத்த தமிழ் படங்கள்!

பொங்கல் ரேஸில் இணைந்த அடுத்தடுத்த தமிழ் படங்கள்!

-

- Advertisement -

பொங்கல் ரேஸில் இணைந்த புதிய படங்கள்

மெட்ராஸ்காரன்

ஷேன் நிகாம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா பாண்டியராஜன் ஆகியோரின் நடிப்பில் மெட்ராஸ்காரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். பொங்கல் ரேஸில் இணைந்த அடுத்தடுத்த தமிழ் படங்கள்!காதல் மற்றும் எமோஷனல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டென் ஹவர்ஸ்

சிபி சத்யராஜ் நடிப்பில் டென் ஹவர்ஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஃபைவ் நிறுவனமும் டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார். பொங்கல் ரேஸில் இணைந்த அடுத்தடுத்த தமிழ் படங்கள்!கே எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தருணம்

கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் தருணம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். பொங்கல் ரேஸில் இணைந்த அடுத்தடுத்த தமிழ் படங்கள்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு அருண் விஜயின் வணங்கான், ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ