spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்... நிவாரணப் பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… நிவாரணப் பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு…

-

- Advertisement -

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெப்பன் படக்குழுவினர், நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தில் நயன்தாரா, ஜெய்யுடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனிடையே, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் வெப்பன். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வெப்பன் படக்குழுவினர் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

MUST READ