கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
இதற்கான பிரமோஷன் பணிகளும் மலேசியா, மும்பை, துபாய் போன்ற பல பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன் முதல் பாகத்தில் பார்த்த சேனாதிபதியை இந்தியன் 2 படத்தில் காண ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துகொண்டிருகின்றனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படக்குழு படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த பேட்டியில், ” வழக்கமாக சென்சார் போர்டு உறுப்பினர்கள் சுலபமாக எந்த ஒரு படத்தையும் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தை பார்த்த பின் பாராட்டினார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -