”பன் பட்டர் ஜாம்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து விஜய் வாழ்த்தியதாக நடிகர் ராஜு ஜெயமோகன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜு ஜெயமோகன் நடிப்பில் பன் பட்டர் ஜாம் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.ஜூலை 18ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், நான்கு நிமிடம் கொண்ட படத்தின் டீசா் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பார்த்து நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை கொடுப்பதாக என தெரிவித்ததாக நடிகர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
