ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும் ராவணன் இடையேயான மோதலை வெளிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா. நித்தஷ் திவாரி இயக்கத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக கேஜிஎப் புகழ் யஷ், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி மற்றும் சன்னி தியோல், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது. உலக புகழ்பெற்ற ஹேன்ஜ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இசையில் உருவாகி வரும்”ராமாயணா” திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தை நிமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பிரபல VFX நிறுவனமான DNEG இப்படத்தின் க்ராஃபிக்ஸ் காட்சிகளுக்காக பணிபுரிகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் மற்றும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளி பண்டிகையன்று வெளியாகும். படத்தின் 2 பாகங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
