Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் 'சத்யா' பட ரீமேக்கில் நடிக்கும் முன்னணி இளம் நடிகர்!

கமல்ஹாசனின் ‘சத்யா’ பட ரீமேக்கில் நடிக்கும் முன்னணி இளம் நடிகர்!

-

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் பரீட்சையமானவர். கமல்ஹாசனின் 'சத்யா' பட ரீமேக்கில் நடிக்கும் முன்னணி இளம் நடிகர்!இவர் சமீபகாலமாக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. கிரைம் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ராட்சசன் படத்திற்கு முக்கியமான படமாக இன்றுவரையிலும் பேசப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தற்போது இது சம்பந்தமான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகர் அசோக் செல்வன் கடந்த சில புதிய கெட்டப்பில் வலம் வருகிறார். அதாவது கமல்ஹாசனுடைய சத்யா பட லுக்கில் சுற்றித் திரிகிறார்.கமல்ஹாசனின் 'சத்யா' பட ரீமேக்கில் நடிக்கும் முன்னணி இளம் நடிகர்! இந்த கெட்டப் எதற்காக என்று பலரும் விவாதித்து வந்த நிலையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க உள்ள புதிய படத்தின் கெட்டப் தான் இதுவாம். அது மட்டும் இல்லாமல் இந்த படம் சத்யா படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறதாம். இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ