Homeசெய்திகள்சினிமாதிமிரு பட வில்லி நடிக்கும் 'அண்டாவ காணோம்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

திமிரு பட வில்லி நடிக்கும் ‘அண்டாவ காணோம்’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

அண்டாவ காணோம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.திமிரு பட வில்லி நடிக்கும் 'அண்டாவ காணோம்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

பிரபல நடிகை ஸ்ரியா ரெட்டி சாமுராய், வெயில், திமிரு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதற்கிடையில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை மணம்முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரியா ரெட்டி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வேல்மதி இயக்கியுள்ள அண்டாவ காணோம் இன்னும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரியா ரெட்டி. இந்த படத்தை ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள்  நிறைவடைந்து அதைத் தொடர்ந்து ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  திமிரு பட வில்லி நடிக்கும் 'அண்டாவ காணோம்'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் 2024 ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ