தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. நாளை அப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.
வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பு, யோகி பாபு, சதீஷ், வி.டி.வி. கணேஷ் உட்பட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
#JUSTIN | வாரிசு படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு#SunNews | #VarisuTralier | #Varisu | #Vijay pic.twitter.com/Q5GXs9PBdS
— Sun News (@sunnewstamil) January 3, 2023

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 31-ம் தேதி துணிவு பட டிரெய்லர் வெளியான நிலையில், நாளை வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.
மேலும் விஜய்யின் வாரிசு படத்துடன், அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு மோத உள்ளது. இதனால் 2 படக்குழுவும் புரோமோசன் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று துணிவு படத்தின் CENSOR CERTIFICATE வெளியான நிலையில், தற்போது வாரிசு படத்தின் CENSOR CERTIFICATE வெளியாகி இருக்கிறது.
வாரிசு படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது.