Homeசெய்திகள்சினிமாதிரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மூவரும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்..... நீதிமன்றம் உத்தரவு!

திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மூவரும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்….. நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

3திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மூவரும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்..... நீதிமன்றம் உத்தரவு!திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகிய மூவரையும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரை உலகில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பூகம்பமாய் வெடித்துக் கொண்டிருக்கும் விஷயம் மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரம் தான். திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் மன்சூர் அலிகான் பேசியது தவறு என கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். அதனை திரிஷாவும் ஏற்றுக் கொண்டதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். ஆனால் இந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மூவரும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்..... நீதிமன்றம் உத்தரவு!முடிந்த பிரச்சனையை மீண்டும் தோண்டி எடுப்பது போல் மன்சூர் அலிகான், குஷ்பூ, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார். முழு வீடியோவையும் பார்க்காமல் தன் பெயரைக் கெடுக்கும்படி நடந்து கொண்டதால் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகிய மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, நியாயமாக இந்த வழக்கை திரிஷா தானே கொடுத்திருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இந்த வழக்கை வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

MUST READ