தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இப்படம் 2025 மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூர்யா. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் எனவும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார் எனவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளர் தாணு , சூர்யா, வெற்றிமாறன் ஆகிய மூவரும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளனர். ஜி.வி. பிரகாஷும் இந்த படத்தின் பணிகளை தொடங்கியிருந்தார்.
ஆனாலும் நடிகர் சூர்யா தன்னுடைய 46வது படத்தை முடித்த பின்னர்தான் வாடிவாசல் திரைப்படத்தை தொடங்குவார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும். ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிமாறன் 25 நிமிடங்கள் கதை சொன்னார். இந்த 25 நிமிடங்கள் போதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க என்று அவரிடம் நான் சொன்னேன். அந்த அளவிற்கு திரைக்கதை அருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -