இயக்குனர் பாலா, தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தனி ஸ்டைலை பின்பற்றுபவர். இயக்குனர் பாலாவின் ரசனை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவரின் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தரும். அந்த வகையில் இடம் பிடித்தது தான் விக்ரமிற்கு சேது திரைப்படமும் சூர்யாவிற்கு நந்தா திரைப்படமும். இப்போது முதன்முதலாக அருண் விஜய் உடன் பாலா கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி பாலா, அருண் விஜய் கூட்டணியில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் சூர்யா வெளியேறினார். அவருக்கு பதிலாக தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார். இதனை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில் அருண் விஜய் ஒரு கையில் கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலையையும், இன்னொரு கையில் கடவுளாகிய பிள்ளையாரின் சிலையையும் வைத்திருந்தார். இந்த போஸ்டரின் மூலம் இயக்குனர் பாலாவின் வணங்கான் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது.
அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில் படக்குழுவினர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி வணங்கான் படத்தின் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -