விமல் நடித்துள்ள ‘குலசாமி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
குட்டிப்புலி, தர்மதுரை படத்தில் நடித்த சரவண சக்தி இயக்கத்தில் விமல் தற்போது குலசாமி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சரவண சக்தியின் மகன் சூர்யா, வில்லனாக நடிக்கிறார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முக்கியமாக இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடகர் மகாலிங்கம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதிக்கு படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மார்டின் நிர்மல் குமார் என்பவர் இயக்கத்தில் ‘தெய்வ மச்சான்’ என்ற படத்திலும் விமல் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நேகாஜா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.