வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று தந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி விடுதலை படத்தின் அதன்படி விடுதலை 2 திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இது சம்பந்தமான அப்டேட்டை பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.