Homeசெய்திகள்சினிமாநடிகை அபிராமியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த 'வேட்டையன்' படக்குழு!

நடிகை அபிராமியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த ‘வேட்டையன்’ படக்குழு!

-

- Advertisement -

வேட்டையன் திரைப்படத்திலிருந்து நடிகை அபிராமியின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகை அபிராமியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த 'வேட்டையன்' படக்குழு!

வருகின்ற அக்டோபர் 10ஆம் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். அமிதாப் பச்சன் காவல்துறையின் உயர் அதிகாரியாக சத்ய தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ராணா நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பகத் பாசில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷாரா விஜயன், சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியார், தாரா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், ரூபா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்த கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். தற்போது நடிகை அபிராமியின் கதாபாத்திரத்தையும் படக்குழு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை அபிராமி வேட்டையன் திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ