விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 ஆவது படமாகும். இதனை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த படத்தின் டீசரும் அதைத்தொடர்ந்து சவதீகா எனும் பாடலும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென நேற்று (டிசம்பர் 31) இரவு விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்படுவதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே விடாமுயற்சி திரைப்படமானது இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.