spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை.... 'விடாமுயற்சி' பட அப்டேட்!

மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை…. ‘விடாமுயற்சி’ பட அப்டேட்!

-

- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை.... 'விடாமுயற்சி' பட அப்டேட்!

அஜித்தின் 62 வது படமாக விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் இணைந்து ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை.... 'விடாமுயற்சி' பட அப்டேட்!ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதேசமயம் விடாமுயற்சி திரைப்படமானது, பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதை மூன்று காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பது தெரியவந்துள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை.... 'விடாமுயற்சி' பட அப்டேட்!அதன்படி, நிகழ்காலத்தில் நடப்பது, ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடப்பது, 12 வருடங்களுக்கு முன்பு நடப்பது என மூன்று காலகட்டங்களில் இந்த கதை நகருமாம். எனவே 12 வருடங்களுக்கு முன்பாக ஒருவன் எப்படி இளமையாக இருக்கிறானோ அதேபோல் நடிகர் அஜித்தும் இளமையாக தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ