spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானில் முடிக்க விடாமுயற்சி படக்குழு திட்டம்

முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானில் முடிக்க விடாமுயற்சி படக்குழு திட்டம்

-

- Advertisement -
ஆர்யா நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கலாப காதலன். இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கலை இயக்குநராக அறிமுகமானவர் மிலன். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய அவருக்கு அடுத்ததாக அஜித் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படத்திலும் மிலன் இணைந்து பணியாற்றினார். கலை இயக்குநராக சினிமாவில் பிரபலமும் அடைந்தார்.
தற்போது, மகிழ்திருமேனி இயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக அஜித் மட்டுமன்றி த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும் அஜர்பைஜான் பறந்தனர். கலை இயக்குநர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார். டப்பிடிப்புக்காக ஓட்டல் அறையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது அவரது மனைவி இப்படத்திற்கு கலை இயக்குநராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜானிலேயே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பிரம்மாண்டமாக படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதால், வெளிநாட்டிலேயே மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய இருக்கின்றனர்.

MUST READ