Homeசெய்திகள்சினிமாவிடுதலை - 2 படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பம்!

விடுதலை – 2 படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பம்!

-

கடந்த மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆர் எஸ் இன்ஃபோடர்மன்ட் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

அண்மையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுமலை பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதில், சூரி, விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மஞ்சு வாரியாரும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கின்றனர். இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாக காட்ட டீஏஜிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

MUST READ