spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட டீசர் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ பட டீசர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட டீசர் குறித்த அறிவிப்பு!

we-r-hiring

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் வள்ளி மயில், ககன மார்கன் போன்ற படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து த்ருப்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இதற்கு இசையும் அமைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் 25வது படமான இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' பட டீசர் குறித்த அறிவிப்பு! இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அடுத்தது இப்படமானது 2025 கோடையில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (மார்ச் 12) மாலை 5.01 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ