spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது... மாணவர்கள் மத்தியில் அசுரன் டயலாக் பேசிய விஜய்!

படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது… மாணவர்கள் மத்தியில் அசுரன் டயலாக் பேசிய விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய், மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் காலை 10 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளபதி விஜய் தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை படித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் மாணவர்களும் பெற்றோர்களும் காலை 6 மணி முதல் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அதன் பின் இந்நிகழ்ச்சியில் கலந்து உள்ள வந்திருக்கும் மாணவ, மாணவியர்களின் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் செல்போன்கள் அரங்கத்தினுள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 5000 க்கும் மேலானவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் வழங்கப்படுகிறது.

we-r-hiring

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதன்முறை.விஜய்

கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன் . இன்று அது நிறைவேறி உள்ளது.

நாளைய வாக்காளர்கள் ஆனா நீங்கள் ஓட்டு போட்டு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் கையை கொண்டு கண்ணை குத்தும் செயல் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள்.

“காடு இருந்தா எடுத்துக்குவாங்க, காசு இருந்தா புடிங்கிட்டுவாங்க. ஆனால் படிப்ப மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது” என்ற அசுரன் படத்தின் வரிகள் என்னை மிகவும் பாதித்தது. கல்வியைப் பற்றி நான் இந்த மேடையில் பேசுவதற்கு இந்த வசனம் ஒரு முக்கிய காரணம்.
அது மட்டும் இல்லாமல் மாணவர்களான நீங்கள் பாடப் புத்தகங்களை தாண்டி அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற பல தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பணத்தை இழந்தாலும் குணத்தை இழக்க கூடாது அது போல படிப்பை தாண்டி பல நல்ல குணங்களும் சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். “When wealth is lost, nothing is lost …when health is lost, something is lost… when character is lost, everything is lost” என்று மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

MUST READ