விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் கடைசியாக ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் ‘காந்தி டாக்ஸ்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ட்ரெயினில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக மிஸ்கினும், ஒளிப்பதிவாளராக பௌசியா பாத்திமாவும் பணியாற்றியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து டிம்பிள் ஹயோதி, சம்பத்ராஜ், வினய் ராய், கே.ஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்து இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.