தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். எனவே இவர் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தை முடித்த பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆகையினால் இவரது கடைசி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் கடைசி படத்தை இயக்க பல இயக்குனர்களும் விரும்பிய நிலையில் கடைசியில் அந்த வாய்ப்பு ஹெச். வினோத்துக்கு கிடைத்தது. அதன்படி விஜய் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் தளபதி 69 படமானது அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் அக்டோபர் 5இல் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது விவசாயத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் தொடர்பான கதைக்களம் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது விவசாயிகளின் நிலை மற்றும் சமூகத்தில் விவசாய பிரச்சனைகள் குறித்து பேசும் படம் தான் தளபதி 69 என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு படம் தொடரமாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் விவசாயத்திற்கு எதிராக கார்ப்பரேட் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.