spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாத.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்.... இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!

த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்…. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!

-

- Advertisement -

விஜய் தமிழ் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்.... இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!அதே சமயம் இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். எனவே விஜய் தனது 69 வது திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார்.த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்.... இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி! இதற்கு முன்பாக நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். அதில் ஒன்றுதான் தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை இப்படித்தான் மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார் விஜய். த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்.... இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!விஜயின் இந்த செயல் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. தற்போது இந்த வருடமும் நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்க இருக்கிறாராம். இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 28 மற்றும் ஜூலை 3 நடைபெற இருப்பதாக புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ