தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் இவர், செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி, சண்டைக்கோழி, திமிரு என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். ஆக்சன் காட்சிகளில் மட்டுமல்லாமல் சென்டிமென்ட், காதல் காட்சிகளிலும் மிரட்டினார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த திருநங்கைகள் அழகி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது விஷால் நலமுடன் இருக்கும் தகவல் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் 47 வயதாகியும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
ஏற்கனவே விஷால் கீர்த்தி சுரேஷ், அபிநயா போன்ற நடிகைகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஷாலின் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சங்கம் திறந்தவுடன் தன்னுடைய திருமணம் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட இருக்கிறது. எனவே 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளன்று விஷால் , தனது திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
