spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ஆர்யன்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆர்யன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ஆர்யன்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கட்டா குஸ்தி 2, இரண்டு வானம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரவீன்.கே இயக்க இதனை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘ராட்சசன்’ படத்தை போல் க்ரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ படத்தை போல் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. வசூல் ரீதியாகவும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ஆர்யன்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ