இன்றைக்கான சினிமா அப்டேட்ஸ்
இன்று (செப்டம்பர் 19) திரையரங்குகளில் கவினின் கிஸ், விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், பா. ரஞ்சித்தின் தண்டக்காரண்யம், படையாண்ட மாவீரா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. இது தவிர ஹவுஸ் மேட்ஸ், பீனிக்ஸ் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள ‘டியூட்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று (செப்டம்பர் 19) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள ‘ரெட்ட தல’ படத்திலிருந்து ‘கண்ணம்மா’ எனும் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 19) மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் இன்று (செப்டம்பர் 19) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.