Homeசெய்திகள்சினிமாபாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி.... 'விடாமுயற்சி' படத்தால் ஏற்பட்ட சிக்கல்!

பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி…. ‘விடாமுயற்சி’ படத்தால் ஏற்பட்ட சிக்கல்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2010 முன் தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி.பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி.... 'விடாமுயற்சி' படத்தால் ஏற்பட்ட சிக்கல்! அதாவது இவர் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான தடையற தாக்க, தடம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இருப்பினும் அஜித் நடிப்பில் இவர் இயக்கியிருந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அதாவது அஜித்தின் மற்ற படங்களை போல் மாஸ், பில்டப் எதுவும் இல்லாமல் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ஒரு சில ரசிகர்களை கவர்ந்தாலும், ஒரு சில ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி.... 'விடாமுயற்சி' படத்தால் ஏற்பட்ட சிக்கல்!ஆனால் விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்பு பல பேட்டிகளில் இது தன்னுடைய கதை இல்லை என கூறியிருந்தார் மகிழ் திருமேனி. இருந்த போதிலும் விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு மகிழ் திருமேனி தான் காரணம் என நெட்டிசன்கள் பலரும் அவரைத் திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையில் அவர் விஜயை சந்தித்து சில கதைகளை சொன்னதாகவும், அந்த கதைகள் விஜய்க்கு பிடித்துப் போனதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் – மகிழ் திருமேனி கூட்டணி நடக்காமல் போய்விட்டது. இனிமேலும் அது நடக்குமா? நடக்காதா? என்பது அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கையில் தான் இருக்கிறது. பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி.... 'விடாமுயற்சி' படத்தால் ஏற்பட்ட சிக்கல்!இதற்கிடையில் மகிழ் திருமேனி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை ஒரு வரி கதை ஒன்றை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை அமிதாப் பச்சனுக்கும் பிடித்து விட்டதாம். ஆனால் விடாமுயற்சி ரிலீஸுக்கு பின்னர் அமிதாப் பச்சனை, மகிழ் திருமேனியால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். எனவே சூழல் இப்படி இருக்க அடுத்தது அவர் என்ன படம் எடுக்கப் போகிறார்? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

 

MUST READ