spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சார்பட்டா பரம்பரை 2' எப்போது தொடங்கும்?.... ஆர்யா கொடுத்த அப்டேட்!

‘சார்பட்டா பரம்பரை 2’ எப்போது தொடங்கும்?…. ஆர்யா கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்து நடிகர் ஆர்யா லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.'சார்பட்டா பரம்பரை 2' எப்போது தொடங்கும்?.... ஆர்யா கொடுத்த அப்டேட்!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. குத்துச்சண்டை சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியான போதும் மாபெரும் வெற்றி பெற்று ஆர்யாவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் பா. ரஞ்சித் இயக்க உள்ள வேட்டுவம் திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம் உருவாகும் என செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் இந்த படம் வெறித்தனமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.'சார்பட்டா பரம்பரை 2' எப்போது தொடங்கும்?.... ஆர்யா கொடுத்த அப்டேட்! இந்நிலையில் நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது, “சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ