spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅரசியலுக்கு வருகிறாரா அஜித்... பிரபல இயக்குநரின் பதிவால் பரபரப்பு!

அரசியலுக்கு வருகிறாரா அஜித்… பிரபல இயக்குநரின் பதிவால் பரபரப்பு!

-

- Advertisement -
நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பிரபல இயக்குநர் ஒருவர் போட்டுள்ள பதிவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த சில ஆண்டுகளாக சினிமா விழாக்களிலும், பொது விழாக்களிலும எதுவும் கலந்து கொள்ளாமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அவருக்கு விருப்பமான பைக் பயணம், விமானம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா முழுவதும் பயணம் செய்தவர், தற்போது நடித்து வரக்கூடிய விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு உலக டூர் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், தான் நடிகர் அஜித் அரசியலுககு வரப் போகிறார் என பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

we-r-hiring

 

 

அந்த பதிவில் அவர், நான் சாரிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர உள்ளதாக கூறியதை கேட்டேன். எப்போது என்றால், பிரேமம் படத்தில் நிவின் நடிப்பை கண்டு ரசித்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவினை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே அப்போது. ஆனால், இதுவரை உங்களை எந்த அரசியல் கட்சிகளிலும் பார்க்கவில்லை. அப்படி எனில், அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள். இல்லை நீங்கள் அதை மறந்து வீட்டீர்களா? இல்லை எனில் வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா? இது மூன்றும் இல்லை என்றால் எனக்கு கடிதம் வாயிலாக நீங்கள் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் நான் உங்களை நம்புகிறேன். பொதுமக்களும் நம்புகின்றனர். என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ