திரை உலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான யோகி பாபு தற்போது ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தூக்குதுரை, பூமர் அங்கிள், மிஸ்மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் யோகி பாபுவின் 38 வது பிறந்த நாளை முன்னிட்டு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here is my next movie first look motion poster of #VAANAVAN
Directed by @sajinksofficial 🎬#Edenflicks #ThomasGeorge@thilak_ramesh @LakshmiPriyaaC @Kaaliactor pic.twitter.com/c9SxkxIw9C— Yogi Babu (@iYogiBabu) July 22, 2023
இந்த புதிய படத்திற்கு வானவன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பையும் மோஷன் போஸ்டரையும் பார்க்கும்போது படமானது காடுகளின் வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி வருவதாக தெரிய வந்துள்ளது.
ஈடன் பிலிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாமஸ் ரெனி ஜார்ஜ் தயாரிக்கிறார். இந்த படத்தை சஜின் கே சுரேந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ரமேஷ் திலக், லட்சுமி பிரியா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்கிறார்.
தற்போது யோகி பாபுவின் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் வானவன் திரைப்பட குழுவினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.