spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

-

- Advertisement -

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.  இன்னும் ஐந்து லீக் போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், அரையிறுதி  போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட்: அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

we-r-hiring

இந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான டிக்கெட் என்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு புக் மை ஷோ (Book my show) இணையதளத்தில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதல் அரை இறுதி போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது அரை இறுதிபோட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும்  நடைபெறவுள்ளது.

 

MUST READ