spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி

-

- Advertisement -

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்தார்.

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்/31 என்பவர் சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் ரெயில்வே, வங்கி, மின்வாரியம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக அலுவலகமும் நடத்தி வந்தார்.

அலுவலகம் மற்றும் அவருடைய பேச்சு ஆகியவற்றை நம்பிய ரகு தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி 12 லட்சத்தை கார்த்திகேயனிடம் கொடுத்தார். மேலும் அதே பகுதியில் உள்ள தனது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோரிடம் 4 லட்சம் முதல் 36 லட்சம் வரை வாங்கி வேலைக்காக கொடுத்தார்.

ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் சொன்னது போல் ஒருவருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரகு புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வந்தார்.

இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது இதுபோல் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1 கோடியே 11,40,000 ரூபாய் வரை பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான கார்த்திகேயனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

MUST READ