அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையின் கம்பிகளை உடைத்து ஐந்து கைதிகள் தப்பி ஓடியதை வைத்து சிறை நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலிஸாரின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு சிறைச் சுவரை அளப்பதற்காக கைதிகள் போர்வைகள், லுங்கிகள் மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் ஒரு முறை அவர்கள் இரும்பு கம்பிகளை உடைத்து சிறைச் சுவரில் இருந்து தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது
சிறைச் சுவர் சுமார் 20 அடி உயரம் என்பதால் உயரமான சுவரில் இருந்து தப்பிச்செல்ல கைதி போர்வைகள், லுங்கிகள் மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தி நீண்ட நூலை உருவாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது. தப்பி ஓடிய ஐந்து பேரும் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் சைபுதீன், ஜியாருல், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் என அடையாளம் காணப்பட்டனர்.
”குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று காவல்துறை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.