Homeசெய்திகள்க்ரைம்டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில்...

டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி – குற்றவாளி குஜராத்தில் கைது

-

டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி – குற்றவாளி குஜராத்தில் கைது

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேண்டும் போது எடுத்துகொள்ளலாம் என தகவல் அளித்துள்ளனர்.

இதனால் முதலில் 10 ஆயிரம் போட்டுள்ளார்.  13 ஆயிரமாக எடுக்க முடிந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மோகந்தாஸ் மேலும் அதிகம் முதலீடு செய்ய விருப்பப்பட்டார். இதனால் அவரை வேறு ஒரு வாட்ஸ் ஆப் குருப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக தொகை திரும்ப பெற்றதாக ஸ்கீரின்ஷாட்கள் போடப்படுவதை பார்த்து 5 லட்சம் போட்டார். 7 லட்சம் வங்கி கணக்கில் விழுந்துள்ளது.

டெலிகிராம் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில் கைது

மேலும் மோகன்தாஸ் வி.ஐ.பி வர்த்தகர் என கூடுதலாக மகிழ்சியளிக்கும் வாசகங்களுடன் வர மோகன்தாஸ் குஷியாகி மேலும் மேலும் பணம் என 69.90 லட்சம் மூதலீடு செய்தார். ஆனால் அவருக்கு லாபத்துடன் ஒரு கோடி திரும்ப பெறலாம் என காட்டியது. ஆனால் இம்முறை அவர் பணத்தை எடுக்க முடியவில்லை. அதுகுறித்து கேட்டபோது ஒரு கோடி எடுக்க வேண்டும் என்றால் 50 லட்சம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உஷாரான மோகன்தாஸ் (11.4.23) அன்று தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டெலிகிராம் மூலம் அறிமுகமாகி பணமோசடி குறித்து புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் சுப்புலஷ்மி மேற்பார்வையில் ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் மோசடி புகார் குறித்து முதற்கட்டமாக விசாரணையை துவக்கியபோது, மோகன்தாஸ் செலுத்திய பணம் சென்ற வங்கி கணக்கு குறித்து கே.ஒய்.சி எண் பார்த்தபோது, மோசடி கும்பல் வறுமையில் உள்ளவர்கள்  மூலம் கணக்கு துவங்கி அவர்களுக்கு 20 ஆயிரம் வழங்கிவிட்டு அவர்களின் ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட முழு விவரத்தையும் கொண்டு சென்று அதனை இண்டர் நெட் பேங்கிங் முறையில் அந்த கணக்கில் இருந்து ஹாங்காங், இங்கிலாந்து என வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகளுக்கு 2 கோடியே 25 லட்சம் பணம் பறிமாற்றம் செய்துள்ளனர்.

டெலிகிராம் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில் கைது
குற்றவாளி நிகில்

இதனால் வெளிநாட்டு வங்கிகளின் உதவியுடன் தொடர் விசாரணை செய்து பெற்ற தகவலின் அடிப்படையில் குஜராத்தில் பதுங்கி இருந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரியான்ஷி ஷர்மா (எ) நிகிலை, குஜராத் மொழி பெயர்ப்பாளர்களுடன் 10 பேர் கொண்ட குழு  ஆய்வாளர் சசிக்குமார் தலைமையில் சென்று அங்கு கைது செய்தனர்.

மேலும் ஒரு லேப்டாப், இரண்டு ஆன்ராய்டு செல்போன்கள், காசோலைகள் என ஆதாரங்களுடன் உரிய முறையில் தாம்பரம் காவல் ஆணையரகம் கொண்டுவந்து விசாரணை செய்த நிலையில் இன்று தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பிரியான்ஷி ஷர்மா (எ) நிகில் கணக்கில் இருந்த 44 லட்சம் 70 ஆயிரம் பணத்தையும் முடக்கிய நிலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் அவர்களையும் உரிய விசாரணையின் பேரில் கைது செய்திட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக காவல்  துறையினர் தெரிவித்தனர்.

ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெற்றால் அதனை பிடிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ள நிலையில் இந்த மோசடி சம்பவத்தில் மிக திறமையாக புலனாய்வு செய்து தொடர்ச்சியாக 4 மாதம் கழித்து குற்றவாளி கைது செய்யப்பட்ட நிகழ்வும் அதன் பின்புலத்தில் எப்படி பணம் பரிமாற்றம் செய்கிறார்கள் என அறிந்து, குஜராத் மொழிபெயர்ப்பாளர்களுடன் சென்று வடமாநிலத்தில் குற்றவாளியை கைது செய்ததை உயர் காவல் அதிகாரிகள் பாரட்டினார்கள்.

MUST READ