spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

-

- Advertisement -

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில்  குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.

we-r-hiring

இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லை.

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

குமரேசன் கரியாபட்டினம் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டு மாடியின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சத்தம் கேட்ட பெற்றோர்கள் மற்றும் அவரது மனைவி ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது குமரேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மனைவி புவனேஸ்வரி கணவன் இறந்த அதிர்ச்சியில் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து அவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

புகாரின் பேரில் காரியாபட்டினம் போலீசார் இருவரது உடலையும் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ