வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவதை மாற்றி வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர் போன்று போன் செய்து ₹ 9.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரில் தன்வி ஹோண்டா ஷோரூம் உள்ளது. இந்த ஷோருமிற்கு பெங்களூரில் உள்ள ஜோமோட்டோ உணவு விநியோக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் பேசிய சைபர் குற்றவாளிகள் உணவு டெலிவரிக்காக பத்து இரு சக்கர வாகனங்கள் வேண்டும் எனக்கூறி இதற்காக ஹோண்டா ஷோரூம் லெட்டர்ஹெட்டில் கோட்டோஷன் விலைப்பட்டியல், கேன்சல் என எழுதிய காசோலையை லெட்டர் ஹெட்டுடன் தபாலில் அனுப்பும்படி கூறி உள்ளனர்.

இதனால் ஒரே நேரத்தில் பத்து பைக்குகள் ஆர்டர் வந்ததால் முன்பின் ஆலோசிக்காமல் ஷோரூம் மேனேஜர்களும் அதேபோன்று உடனடியாக தன்வி ஹோண்டா ஷோரூம் லெட்டர்ஹெட்டுடன் அதன் உரிமையாளர் கவிநாத் ரெட்டியின் காசோலையை கேன்சல் என எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில் திருத்தம் செய்து தன்வி ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் கவிநாத் ரெட்டி எழுதியது போன்று தனது காசோலையில் உள்ள பணத்தை குறிப்பிடும் வங்கிகளுக்கு பணம் மாற்றும்படி லெட்டர்ஹெட்டில் திருத்தம் செய்து கொண்டனர். மேலும் காசோலையில் கேன்சல் என எழுதப்பட்டு இருந்ததையும் போட்டோப் ஷாப் மூலம் அகற்றிவிட்டனர்.
அதன் பிறகு சைபர் குற்றவாளிகள் அனந்தபுரத்தில் உள்ள ராம்நகர் எஸ்.பி.ஐ. வங்கியின் மேலாளர் அம்பரேஸ்வர சுவாமிக்கு தொலைபேசியில் பேசி தன்வி ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் கவிநாத் ரெட்டி பேசுவதாக கூறினார். மேலும் தற்போது தான் மருத்துவமனையில் இருப்பதாகவும் காசோலைத் தொகையான ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் அவசரமாக நான் செல்லும் வங்கிக்கு மாற்றுமாறு கூறி இதற்காக வங்கி மேலாளரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு திருத்தம் செய்த லெட்டர்ஹெட்டுடன் காசோலையின் புகைப்படத்தையும் வாட்ஸ்அப் மற்றும் இமெயிலில் அம்பரீசுவர சுவாமிக்கு அனுப்பினார்.
இதனை உண்மை என நம்பிய அம்பரீசுவர சுவாமி முன்பின் ஆலோசிக்காமல் ஷோரூம் எண்ணிற்கு போன் செய்து உறுதி செய்யாமல் ட்ரூ காலரில் தன்வி ஹோண்டா கவிநாத் ரெட்டி என வந்ததை வைத்து உடனடியாக பணத்தை மாற்றம் செய்துள்ளார். வங்கியின் பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களை ஜாக்கிரதையாகச் இருக்கும்படி சொல்லும் வங்கி மேலாளாரே சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ. 9 .50 லட்சம் சைபர் குற்றவாளி குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
தங்களுக்கு தெரியாமல் ரூ.9. 50 லட்சம் வேறு கணக்கிற்கு மாற்றியதால் பீதியடைந்த தன்வி ஹோண்டா ஷோரூம் மேலாளர்கள் வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் அம்பரேஸ்வர சுவாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதன் மூலம் உண்மை நிலை தெரிய வந்தது. தொலைபேசியில் அழைத்தவர் தன்வி ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் அல்ல என்றும், சைபர் குற்றவாளி என்றும் தெரிய வந்தது. ஷோரூம் மேலாளர்கள் மற்றும் வங்கி மேலாளரை உஷார்படுத்தி பணத்தை திரும்ப பெறுவதற்குள் சைபர் மோசடி செய்தவர்கள் ரூ. 9. 50 லட்சன் பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி விட்டனர். வங்கி மேலாளர் அம்பரேஸ்வர சுவாமி அலட்சியத்தால் நடந்த இந்த மோசடியால் தன்வி ஹோண்டாவின் உரிமையாளரிடம் வங்கி மேலாளர் தனது சொந்த பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
இதுவரை வங்கியில் இருந்து போன் செய்வதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்த சைபர் குற்றவாளிகள் இப்போது வாடிக்கையாளர் பேசுவதாக கூறி வங்கிகளை ஏமாற்ற ஆரம்பித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்!


