Homeசெய்திகள்க்ரைம்காதலியுடன் போனில் பேசி டென்ஷன் ஆன இளைஞர் - தட்டிக்கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து

காதலியுடன் போனில் பேசி டென்ஷன் ஆன இளைஞர் – தட்டிக்கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து

-

- Advertisement -

காதலியுடன் போனில் ஆபாசமாக திட்டி சண்டை , தட்டிக்கேட்ட நண்பரை கத்திரிக்கோலால் குத்திய மணீப்பூர் இளைஞர் கைது.

காதலியுடன் போனில் பேசி டென்ஷன் ஆன இளைஞர் - தட்டிக்கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து

மணீப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைசுஅலின் (32). இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவருடன் தங்கி இருப்பவர் மணீப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பௌமின்லியன். இருவருக்கும் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்.

நேற்று பௌமின்லியன் தனது காதலியுடன் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது காதலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. உடன் தங்கி இருக்கும் கைசுஅலின் இதனை கண்டித்ததாக தெரிகிறது. சத்தம் போடாதே, தொந்தரவு செய்யாதே என கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில் பௌமின்லியன் அங்கிருந்த கத்திரிக்கோலால் கைசுஅலினை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை, பௌமின்லியனே
சிகிச்சைக்காக அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஓடி விட்டார்.

ஆனால் கைசுஅலின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து திருவான்மியூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பௌமின்லியன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய பௌமின்லியனை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.

MUST READ