கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜம்புலிபுத்தூர் சாலையில் வசித்து வந்தவர் ஜாகிர் ஹுசைன்(55) இவர் ஆண்டிபட்டி வைகை அணைச்சாலை ஓரத்தில் மீன் கடை வைத்திருந்தார். இவருடன் ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் பகுதியை சேர்ந்த அன்பு என்ற சிவக்குமாரும் இணைந்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் மீன் வியாபாரி ஜாகிர்உசேன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஜாகிர் உசேனின் மகள் பரக்கத்நிஷா புகாரின் பேரில்
ஆண்டிபட்டி காவல்துறையினர் விரைந்து சென்று ஜாகிர் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த வீட்டில் உள்ள தடயங்களை சேகரித்தும் அருகில் உள்ளவர்களை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அப்போது மீன் வியாபாரத்தின் கூட்டாளி அன்பு என்ற சிவக்குமாருக்கும் ஜாகிர் உசேனின் மனைவி ரிஷ்வானா (47) விற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஜாகிர் உசேனின் மனைவி ரிஷ்வானாவிற்கு சிவக்குமார் தைலம் தேய்த்து விட்டதை நேரில் பார்த்த ஜாகிர்உசேன் இருவரையும் மீண்டும் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தீபாவளி பண்டிகையில் அதிக மீன் வியாபாரம் நடைபெறுகின்ற காலத்தில் ஜாகிர் உசேன் மதுக்குடித்துவிட்டு வியாபாரம் செய்ய போகாமல் வீட்டில் தூங்கியுள்ளார்.இதை சிவக்குமார் கண்டித்துள்ளார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
‘இந்து ஐஏஎஸ்’ அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு: பரபரப்பை ஏற்படுத்திய மதக் குழுக்கள்
அப்போது கள்ளக்காதலன் சிவக்குமார் மற்றும் ரிஷ்வானா சேர்ந்து ஜாகிர் உசேன் கைகளை கட்டி கழுத்தை கத்தியால் அறுத்தும் இரும்பு எடைக்கல்லால் அடித்தும் கொடூரமாக அவரது வீட்டிலேயே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த ஆண்டிபட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்தது ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.