spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைதுகாஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிலாய் பகுதியை சேர்ந்தவர் விஜயராணி ( வயது 24). என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

we-r-hiring

இவர் திருவள்ளூர் அடுத்த பண்ணூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி தினந்தோறும் வேலைக்குச் சென்று வருகிறார்.

காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைதுஇந்த நிலையில் விஜயரணி திருவள்ளூர் அடுத்த கீழ் நல்லாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துபெருமாள் ( வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு மாத காலமாக பிரிந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் விஜயராணி பண்ணூர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த முத்து பெருமாள் அவரை தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

சேலம் அருகே வனப்பகுதியில் எறும்புத்தின்னியை விற்க முயற்சி – 6 பேர் கைது

இதில் காயமடைந்த விஜய ராணியை அவரது வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த முத்து பெருமாளை மப்பேடு போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ