spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

-

- Advertisement -

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK ex-panchayat council president hacked to death in Tiruvallur |  திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 – 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். இன்று அதிகாலை இவர் தமது வீட்டில் இருந்து அருகில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலின் மைதானத்தில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளது.

we-r-hiring

அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த போதும் அவரை வழி மறித்த கும்பல் கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. மைதானத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Murder

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ