Homeசெய்திகள்க்ரைம்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

-

- Advertisement -

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலப்பிரச்சனையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் 2013 ஆம் ஆண்டு வெட்டி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கில் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐயப்பன் என்பவர் அப்ரூவரானார். மேலும் அவர் அரசு சாட்சி என்பதால் அவருக்கு எந்த தண்டணையும் விதிக்கப்படவில்லை.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

அந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்தார்.

மேலும் சுப்பையா கொலை வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆசிரியர் பொன்னுசாமி, மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமி மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – நாதக வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமனம் (apcnewstamil.com)

மேலும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 9 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து குற்றவாளிகள் 9 பேரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் – சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

MUST READ