Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாதக வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமனம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – நாதக வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமனம்

-

- Advertisement -
kadalkanni

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயா நியமிக்கப்பட்டுள்ளார

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ