Homeசெய்திகள்க்ரைம்தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்

தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்

-

- Advertisement -

பொன்னேரி அருகே ஏரிக்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கைது. அத்தை உடனான தகாத உறவை தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை.தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (30). சங்கருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிஃப்ட் மெக்கானிக்காக சங்கர் பணியாற்றி வந்தார். கடந்த 29ஆம் தேதி (நேற்று முன்தினம்) காலை வீட்டிலிருந்து சங்கர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று (30ஆம் தேதி) காலை ஏரிக்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர்கள் சங்கர் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சங்கரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில் அவர் பெண் ஒருவருடன் அடிக்கடி நீண்ட நேரம் தொடர்பிலிருந்து தெரிய வந்ததை தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த (மஞ்சுளா) பெண்ணுடன் சங்கர் தகாத உறவில் இருந்தது உறுதியானது. இதனை எடுத்து அந்தப் பெண்ணை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நீண்ட நேரம் போன் பேசுவதை கண்ட தம்பி மகன் தன்னிடம் கேட்டதாகவும் அப்போது சங்கர் விடாமல் போன் செய்து தொந்தரவு செய்வதாக தனது தம்பி மகன் தயாளனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை எடுத்து தயாளனை காவல்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில் தனது அத்தையிடம் தகாத உறவில் இருந்த சங்கரை கண்டித்ததாகவும் அவர் உறவை கைவிட மறுத்ததால் ஏரி கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மீண்டும் பேசியும் வாக்குவாதம் செய்ததால் அங்கிருந்த இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார் .இதனை அடுத்து தயாளனை கைது செய்து ஆரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது

MUST READ