Homeசெய்திகள்க்ரைம்வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது

வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது

-

- Advertisement -

விருகம்பாக்கம் வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கொலையாளி கார்த்திக்கை செல்போன் டவர் மூலமாக சிவகங்கை, நாங்குநேரி உள்ளிட்ட பல மாவட்டத்திற்கு சென்று தீவிரமாக தேடி வந்த நிலையில் நாங்குநேரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை:  தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது

கார்த்திக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் நாங்குநேரியில் வழக்கு ஒன்றில் சிக்கி கொண்டு சிறைக்கு சென்ற பின் வெங்கடேஷ் வழக்கில் இருந்து வெளியே வரவும், குண்டாஸ் உள்ளீட்ட தண்டனைகளை உடைத்து சொந்த ஊரில் இருந்தால் தொடர்ந்து வழக்கில் சிக்குவாய் எனக்கூறி, சென்னைக்கு அழைத்து வந்து தனக்கு ஓட்டுனராக உடன் வைத்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உத்தரக்குமாரோடு வாடகைக்கு தங்கவைத்துள்ளனர். அங்கு மது அருந்துவது போன்றவற்றை செய்து வந்துள்ளனர். உத்திரக்குமார் இறந்த பிறகு, கார்த்திக் அந்த வீட்டில் தங்கியுள்ளார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் கார்த்திக்,  வெங்டேஷை பேச வேண்டும் எனவும், உணவு சமைத்து வைத்து இருப்பதாகவும் கூறி அழைத்துள்ளார். அப்பொழுது வெங்கடேஷ் உடன் நண்பர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

இரவு 7 மணி வரை மது அருந்தி விட்டு இருவரும் சென்ற நிலையில், வெங்கடேஷ் அங்கேயே தங்கியுள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெங்கடேஷை கொலை செய்து விட்டு, கார்த்திக் தப்பியுள்ளான். நில விவகாரத்தில் கிடைத்த பணத்தை சரிவர பிரித்து கொடுக்காததால் கொலை நடைப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கார்த்கிக்கை சம்பவத்தன்று வெங்கடேஷ் மதுபோதையில் தாக்கி இழிவாக பேசியதாகவும், புதியதாக கட்சியில் கார்த்திக்கிற்கு மாவட்ட அளவில் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்தும் கேலி செய்து பேசியதாகவும், இது தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கார்த்திக் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினால் முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

80 லட்சம் மதிப்புள்ள அட்டைகள் கடத்தல்…கடலோர காவல்படையின் அதிரடி நடவடிக்கை

MUST READ