தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா் .
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (53). இவா், பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அவரது நண்பா் அருள் (48). இவர் இரு சக்கர வாகனத்தில் சாத்தாகோவில்பட்டியிலிருந்து தேவதானப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வத்தலகுண்டு சாலை, காட்டுப் பள்ளிவாசல் விலக்கு அருகே இரு சக்ககர வாகனம் மீது டிராக்டா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கருப்பையா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா். அருள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து டிராக்டா் ஓட்டுநா் பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.