Homeசெய்திகள்க்ரைம்ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு - கடப்பா எம்.பி தொடர்பா?

ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு – கடப்பா எம்.பி தொடர்பா?

-

ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு – கடப்பா எம்.பி தொடர்பா?

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான ஒய் எஸ் விவேகானந்த ரெட்டி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் உள்ள அவரது வீட்டில் 2019 மார்ச் மாதம் 15ஆம் தேதி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில் இந்த கொலை ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொலையில் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2020 ஆம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. மேலும் ஆந்திராவில் வழக்கு விசாரனை நடைபெற கூடாது என்றும் வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்றும் சுனிதா உச்சநீதிமன்றத்தில் கேட்டு கொண்டார்.

அதனை அங்கீகரித்த நீதிமன்றம் இந்த வழக்கை ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டியின் நெருங்கிய ஆதரவாளரான உதயக்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடப்பா எம்பி ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டியின் வீட்டிற்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று பாஸ்கர் ரெட்டியை கைது செய்தனர்.

விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் பாஸ்கர் ரெட்டிக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும் கொலை நடந்த இடத்தில் இருந்தவர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தது, ஆதாரங்களை கலைத்தது போன்ற பின்னனியின் காரணமாக 120பி, மற்றும் 201, 302 ஐபிசி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஸ்கர் ரெட்டியை கைது செய்யப்பட்டதாக அவருடைய மனைவி லட்சுமிக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாஸ்கர் ரெட்டி, மருத்துவ பரிசோதனைக்காக கடப்பா மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

மறுப்புறம் பாஸ்கர் ரெட்டியின் வழக்கறிஞர்கள் கடப்பா சிறைக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த இரண்டு இடங்களுக்கும் அழைத்து செல்லாமல் நேரடியாக ஹைதராபாத்திற்கு பாஸ்கர் ரெட்டியை அழைத்து சென்றனர். ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ