Homeசெய்திகள்க்ரைம்திருவள்ளூரில் கொடூரம் - கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலை

திருவள்ளூரில் கொடூரம் – கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலை

-

திருவள்ளூரில் கணவருடன் கள்ள உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூரில் கொடூரம் - கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலைதிருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக  காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் அதே புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி  என்பவருடன் சுரேஷ் தகாத உறவில்  இருந்து வருவதாக கூறப்படுகிறது.  ராஜேஸ்வரிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சுரேஷ் அதே காய்கறி மார்க்கெட்டில் தனது கள்ளக்காதலி ராஜேஸ்வரிக்கு கடை வாடகை எடுத்து கொடுத்து காய்கறி வியாபாரம் செய்ய வைத்துள்ளார்.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் மனைவி பார்வதி என்பவர், தனது கணவருடன் கள்ள உறவில் உள்ள ராஜேஸ்வரி என்பவரை காய்கறி கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து சுரேஷ் மீண்டும் காய்கறி கடைக்கு தனது கள்ளக்காதலி ராஜேஸ்வரி அழைந்து  வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷின் மனைவி பார்வதி ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல திட்டம் தீட்டி கடந்த 9 ந் தேதி மார்க்கெட்க்கு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்துள்ளார் .

பெட்ரோல் வாங்கி வந்த பார்வதி ராஜேஸ்வரி கடையில் இருக்கும் போது  கேனில் வாங்கி வந்த பெட்ரோலை திறந்து அவர் மீது ஊற்றியுள்ளார். அப்போது கடையில் சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த விளக்கில் பெட்ரோல் பரவி ராஜேஸ்வரி உடலுக்கு மளமளவென தீ பற்றி எரிந்து துடித்துள்ளார்.

கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா

இதனையடுத்து உடனடியாக மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகள் அவர் உடலில் எரிந்திருந்த தீயை அணைத்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட  அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

திருவள்ளூரில் கொடூரம் - கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலைஆனால்  80% க்கு மேல் தீக்காயத்துடன்  இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு  உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார் .

இந்த வழக்கில் பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொள்ள சதி திட்டம் தீட்டியது கொல்ல முயற்சி செய்தது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நகர் போலீசார் பார்வதி,  சுரேஷ், மோகன், விஜயா, முரளி, லட்சுமி, நிதியா, சங்கர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

MUST READ